×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர், ஜன.24: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 2,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 1,500 கனஅடியானது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 1,250 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 961 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 70.77 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 70.79 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 33.38 டிஎம்சியாக உள்ளது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு appeared first on Dinakaran.

Tags : Mettur Dam ,Mettur ,Cauvery ,Okanagan ,Mettur dams ,Okanagan Cauvery ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: ஈஸ்வரன்!